Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
'பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணிக்காக கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வவுச்சர் முறைமை, ஊவாவில் வெற்றியளிக்கவில்லை' என மாகாண முதலமைச்சர் சாமரசம்பத் தஸநாயக்க குறிப்பிட்டார்.
'கொழும்பு 7இல் இருந்துகொண்டு, சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் கல்வியமைச்சருக்கு, ஊவா மாகாணத்திலுள்ள கிராமிய மக்களின் நிலை புரியாதென்பதே எனது நிலைப்பாடு' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹல்துமுல்லையிலுள்ள முன்பள்ளி சிறுவர்;களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, ஹல்துமுல்லை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை(9) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்திலிருந்து, பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. கடந்த 23 வருடங்களாக, இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போதைய புதிய கல்வி அமைச்சரினால் சீருடை துணிகளை பெற்றுகொள்வதற்கு வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறைமை கிராமங்களை கொண்டிருக்கின்ற ஊவா மாகாணத்தில் வெற்றியளிக்கவில்லை.
'வவுச்சர்' முறைமை நீக்கப்பட்டு, ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட முறைமை மீளவும் கொண்டுவரப்படல் வேண்டும். வவுச்சர் முறைமையினால் பெற்றோரும் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்' என அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago