2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வாகன மோசடியில் ஈடுபட்டவரைத் தேடும் பொலிஸார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

வாகனங்கள் விற்பனை செய்ததன் பின்னர் பணம் தருவதாகத் தெரிவித்து, நபர்களிடமிருந்து வாகனங்களைப் பெற்று கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரின் மகன் கண்டி பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

சந்தேகநபரின் தந்தை மஹியாவ பிரதேசத்தில் நீண்ட காலமாக வாகன விற்பனை நிலையமொன்றை நடத்திச் செல்பவர் என்பவருடன் பிரபல அரசியல்வாதியொருவரின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உரிமையாளரின் மகனே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன், அவர் தற்போது பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவர் தொடர்பில் கண்டி பிரதேசத்திலுள்ள பல பொலிஸ் நிலையங்களிலும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .