2025 மே 03, சனிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் படு காயம்

Janu   / 2024 ஜூன் 13 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - பசறை வீதியில், ஊவா பல்கலைக்கழகத்திற்கு அருகில்  வைத்து கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (13) நண்பகல் 12.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது .

தவறான  திசையில் பயணித்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சுமார் 15 அடி தூரம் வீசப்பட்டு காயமடைந்துள்ளதுடன்  குறித்த  இளைஞனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

மேலும் , காரின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X