Janu / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கண்டி பிரதான வீதி கேகாலை மொலகொட பிரதேசத்தில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது .
விபத்தில் , கண்டி, பிலிமதலாவ தந்துரே பிரதேசத்தை சேர்ந்த மூவரும் , கொழும்பு , களனி பிரதேசத்தை சேர்ந்த நால்வருமாக 7 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு கார்களிலும் பயணித்த 8 மாத குழந்தை , 18 மாத குழந்தை , மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் விபத்துக்கு காரணம் எனவும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago