2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வாடகைப் பணம் வழங்குவது நீடிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாஓயா எண்ணற்ற அபிவிருத்தித் திட்டம் காரணமாக பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்களுக்கு, மாற்றுக் காணி வழங்கப்படும் வரும்வரை, வாடகைப் பணத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உமாஓயா எண்ணற்ற அபிவிருத்தித் திட்டம் காரணமாகப் பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்களுக்கு, 6 மாத காலத்துக்கு ஆகக் கூடுதலாக மாதந்த வீட்டு வாடகையைச் செலுத்த, அமைச்சரவையால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த அபிவிருத்தித் திட்டத்தால் தாக்கத்துக்குள்ளான வீட்டு உரிமையாளர்களின் குடியிருப்புக்காக மாற்றுக் காணி வழங்கப்படும் வரையில் இந்தக் குடியிருப்பாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த வாடகை தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளது.

இதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடற்றுறை அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X