Editorial / 2018 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக, காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர், இன்று காலை முதல் வான் மேவி பாய்கின்றது.
இதனால் அணைக்கட்டுக்கு கீழ் பகுதியில், ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .