R.Maheshwary / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையக அரசியலில் இ.தொ.காவை பற்றி குறிப்பிட்டாலோ அல்லது இ.தொ.காவை விமர்ச்சித்தால் மாத்திரமே எதிர்கால அரசியல் உண்டு என்பதால், மாற்று கட்சியினர் தற்போது விமர்சனம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.
இதற்கு இ.தொ.காவோ,இ.தொ.காவின் உறுப்பினர்களோ ஒரு போதும் தளரப்போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
வெறுமனே விமர்சன அரசியலை மட்டுமே மாற்றுக்கட்சி சகாக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.காரணம் மலையகத்தில் நிலையானதும் ஸ்தீரமான அமைப்பு இ.தொ.காவே அதனால் இன்றும் மக்கள் இ.தொ.காவோடு இருக்கின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வீடுகள் கட்டப்பட்டதாக கொக்கரிப்பவர்கள் அவ்வீட்டுதிட்டம் என்னவாகியுள்ளது என சற்றும் சிந்தித்து பார்க்கவில்லை.வெறுமேனே நான்கு சுவர்களை வைத்து கூரை போட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடூக்காமல் வீடு என மக்களுக்கு கொடுத்துள்ளனர்.அவர்கள் கைவிட்ட குறைகளை இ.தொ.கா மாத்திரமே முன்னின்று தற்போது செய்து வருகின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .