Freelancer / 2023 ஜூலை 11 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நல்ல தண்ணீர் நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள நாகதீப பௌத்த விகாரையில் அமைக்க பட்டு உள்ள சுமார் ஜம்பது அடி உயரம் உள்ள புத்தர் சிலையின் பல பகுதிகளில் பத்திற்கும் மேற் பட்ட குளவி கூடுகள் உள்ளன.
தற்போது இப் பகுதியில் கடும் காற்று வீசும் வேலையில் அங்கு காணப்படும் குளவி கூடுகள் கலைந்து அப் பகுதியில் சுற்றுவது டன் மீண்டும் அதே சிலையில் கூடு கட்டி கொண்டு உள்ளதென அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில் தற்போது சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய உள் நாட்டு யாத்திரிகர்கள் தரிசனம் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளதால் மிக மிக சொற்ப அளவில் சிறமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் கடந்த காலங்களை போல் மீண்டும் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

அத் தோடு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மாலை வேளையில் சென்று காலை வேளையில் திரும்பி வரும் வழியில் எந்நேரத்திலும் குளவி கொட்டுக்கு இலக்காகலாம் என அப் பகுதியில் உள்ள அனைத்து விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி அங்கு உள்ள குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago