Editorial / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி பன்விலை விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலத்தின் காணியை அபகரிப்பதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, வித்தியாலத்தின் அதிபர், பன்விலை பொலிஸில் நேற்று (7) முறைப்பாடு செய்துள்ளார்.
பாடசாலையின் விடுமுறை தினமான நேற்று(7), பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு சென்றுள்ளார் என்றும் அலுவலகத்தில் படிவமொன்றைப் பூர்த்தி செய்துகொண்டிருந்த போது, வெளியாட்கள் சிலர், பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்து, காணியை அளவிடும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்றும் அதனைத் தட்டிக்கேட்பதற்காகச் சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணியை அளந்தவர்கள், தாம் நீதிமன்ற அனுமதியுடனேயே காணியை அளவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் பன்விலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago