Editorial / 2018 மே 18 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் இருவர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை லொயினோன் தோட்டத்தைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு நேற்று(17) மாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரே, பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீதுத் தாக்குதல் நடத்தியுள்ளனரென, பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இருவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago