2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில், மண்சரிவு அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளை, பாதுகாப்பான இடங்களில் நிர்மாணித்துக்கொடுப்பதுத் தொடர்பிலான கலந்துரையாடல், பதுளை மாவட்டச் செயலகத்தில், இன்று (2) நடைபெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில், ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், தோட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

பதுளை மாவட்டத்தின் டியனாகல, ஸ்பிரிங்வெலி, மேமலை, ரொசட், லியங்காவெல, தம்பேதென்ன, கனவரெல்ல, யூரி, தெஹிகல, மீரியபெத்த ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளே மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. 
இந்தப் பாடசாலைகளை பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிப்பதுத் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X