2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விசேட கல்வி ஒலிபரப்புச் சேவை

Editorial   / 2021 மே 07 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

மத்திய மகாண கல்வித் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவையுடன் இணைந்து, க.பொ.த.சாதரண தர மாணவர்களுக்கான விசேட கல்வி ஒலிபரப்புச் சேவையை நடத்தவுள்ளது.
விசேட கல்வி ஒலிபரப்புச் சேவை இம்மாதம் 15  திகதி தொடக்கம் தினமும் மாலை 6,30   மணி முதல் 7,30 மணிவரையில் இடம்பெறவுள்ளது.

’குறிஞ்சி குருகுலம்’ என்ற பெயரில் இந்த விசேட கல்வி ஒலிபரப்புச் சேவை நடத்தப்படும்.

“பண்பலை (FM) 90,1,107,3,107,5  ஆகிய அலை வரிசைகளில் இந்நிகழ்ச்சியைக் கேட்டு மாணவர்கள் பயன்பெறலாம்” என மத்திய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்  பெரியதம்பி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“தனியார் ஒலிபரப்புச் சேவைகளிலேயே இளம் தலைமுறையினரின் கவனம் அதிகம் ஈர்க்கப்படுவதால் இவ்வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு மாணவர்கள்  பயன்பெறுவதற்கான வழிகாட்டல்களை ஆசிரியர்களும்  அதிபர்களும்  சமூக நலன் விரும்பிகளும் சமூகப் பொறுப்பு மிக்கவர்களும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கபொ.த.சாதாரன பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான சகல பாடங்களுக்குமான வழிகாட்டல்கள் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களால் இந்நிகழ்ச்சிகளில்  மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X