2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விசேட சந்திப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணியை விஸ்தரிக்கும் நோக்கில், முன்னணிக்கும் தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஷ்பா தலைமையில், இராகலை, நானுஓயா, தலவாக்கலை ஆகிய காரியாலங்களில், நேற்று (7) நடைபெற்றது.

இந்தச் சந்திப்புகளில், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் சி.பத்மநாதன், பிரதி பொதுச்செயலாளர் க.சிவஞானம், மலையகத் தொழிலாளர் முன்னணியின் உப செயலாளரும் பிராந்திய இயக்குநருமான க.செல்வநாதன், உப தலைவர்களான சி.ஜெயக்குமார், ஹரிச்சந்திரன் தேசிய அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் த.ஜனார்த்தன், காரியாலய பொறுப்பாளர் யோகேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கட்சியின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X