Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 15 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜா
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட நானுஓயா நு/ கார்லேபேக் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 200 மாணவர்களின் சுகாதார நலன் கருதி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் டீ பீல்ட் நிறுவனம் ஏற்பாட்டில், நேற்று காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை கார்லேபேக் தமிழ் வித்தியாலயத்தில் நிகழ்ச்சி திட்ட உத்தியோகஸ்தர் எஸ் தர்மேந்திராஜ் தலைமையில் விசேட மருத்துவ முகாம்மொன்று நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பாடசாலையில் உள்ள 200 மாணவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கண்பார்வை இரத்தபரிசோதனை பற்சிகிச்சை போன்ற நோய்களுக்கான பரிசோதனைகளும் மாணவர்கள் மத்தியில் காணப்படும் ஏனைய நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, டீ.பீல்ட் நிறுவன நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் நிசாந்தன் எட்டியாராட்சி கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .