Editorial / 2021 ஜூன் 10 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
சுகயீனம் அடைந்திருக்கும் தங்களுடைய ஐந்து வயதான பிள்ளையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அதிசொகுசு வாகனத்தில் போதைப்பொருள் விற்பனை செய்துகொண்டிருந்த ஜோடியை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த காரிலிருந்து 22 இலட்சம் ரூபாய் பணம், 60 கிராம் ஹெரோய்ன், ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுகயீனம் அடைந்துள்ளதாகக் கூறப்படும் அந்த ஐந்து வயதான பிள்ளை, துணியொன்றினால் சுற்றப்பட்டு, வாகனத்தின் ஆசனத்தில் கிடத்தப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்கு இடமான அந்த வாகனம் பொலிஸாரின் சோதனையிலிருந்து நேற்றுமுன்தினம் (9) இரவு தப்பிச் சென்றுள்ளது.
எனினும், வாவியோரத்தில் வைத்து வாகனத்தை மடக்கிப்பிடித்த பொலிஸார் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு முயன்றுள்ளனர். எனினும், அந்த ஜோடி அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சந்தேகம் கொண்ட பொலிஸார், வாகனத்திலிருந்து 22 இலட்சம் ரூபாயை கைப்பற்றினர். அதனையடுத்து மேற்கொண்ட தேடுதலில் பெண்ணிடமிருந்து 05 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்திலிருந்து 55 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
கை செய்யப்பட்ட ஜோடி, கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல்யமான இரண்டு பாடசாலைகளில் கல்விக்கற்றுள்ளனர். நகரத்துக்கு அண்மையிலிருக்கும் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தே ஹெரோய்ன் போதைப்பொருளை மிகவும் சூட்சுமமான முறையில் விற்பனை செய்துவந்துள்ளனர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025