2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபத்து, கைகலப்பில் ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தை நிர்மாணிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதனை நினைவூட்டும் வகையில் நடத்தப்பட்ட இசை நிகழ்வில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், நேற்று முன்தினம் (1) இரவு இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்வில், இரு தரப்பினருக்கு இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தம்புள்ளை வீதியில், தலைக்கவசம் அணியாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர், லொறியொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இவ்விபத்தில் ரொஷான் விஜயரத்தன (வயது 21) என்பவரே பலியாகியுள்ளார்.

மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பிலும் தம்புள்ளை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .