Editorial / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். ஜலீல்
உக்குவளை பிரதேசத்திலுள்ள மூத்த மற்றும் வளரும் இளம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் ஆகியோரது விபரங்கள் அடங்கிய “எமது முத்துகள்” எனும் தலைப்பிலான நூலொன்றை வெளியிட உக்குவளை வாசிப்போர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இந்நூலில் தமது விபரங்களை உள்ளடக்க விரும்புவோர், தாம் சார்ந்த கலை, எழுத்து, கவிதை மற்றும் படைப்புத் துறைகள் பற்றிய முழுமையான விபரங்களைத் தமது புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். அத்துடன், தெரிவு செய்யப்படும் படைப்பாளிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதற்கும் ஒன்றியம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
EMADHU MUTHTHUKKAL
READERS FORUM
26/C, MARUKONA,
UKUWELA - 21300.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .