2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விறகு சேகரித்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டிய குளவி

Editorial   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில்  ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல்  விறகு சேகரிக்க சென்ற ஆறு இளைஞர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான இளைஞர்களை மீட்ட  பிரதேச மக்கள் அவர்களை, நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள்  விறகு சேகரிக்க சென்ற போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூண்டே இவ்வாறு கலைந்து இளைஞர்கள்  கொட்டியுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X