2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விலைகளை குறைத்தால் விலைகளை குறைப்போம்

Freelancer   / 2023 மார்ச் 09 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைத்தால், பாண் விலையை இன்னும் குறைத்து, நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியுமென தெரிவித்த ஹட்டன் பேக்கரிகளின் உரிமையாளர்கள்,  ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்றனர். 

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  ஏனைய பேக்கரி உற்பத்திகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. பேக்கரி உற்பத்திகளின் விலைகள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டாலும், நுகர்வோரிடமிருந்து கூடுதலான வரவேற்பு இல்லை என்றனர்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான ஏனைய மூலப் பொருட்களின் விலை, கடுமையாக அதிகரித்துள்ளது.

முட்டை விலையும் அதிகரித்துள்ளது. ஆகையால் பாண் ஒன்றை தயாரிப்பதற்கான தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது என்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .