2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வில்பிரட் டவுனில் 10 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி

R.Maheshwary   / 2022 ஜனவரி 19 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

 ஹட்டன்- வில்பிரட் டவுனில் குடியிருக்கும் நோர்வூட் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் வரும், 10 குடும்பங்களுக்கு மாத்திரம் தேவையான காணிகளை ஒதுக்கிக் கொடுத்து விட்டு, ஏனைய காணிகளை நோர்வூட் பிரதேச சபை சுவீகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

 இதன் ஊடாக காடுகள் மண்டாமல் குடியிருப்பார்கள் கவனம் எடுத்துக் கொள்ளும் போது, சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளின்  தொல்லைகள் மற்றும் சுகாதார சீர்கேட்டிலிருந்தும் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

   பிரதேச சபையின்  மாதாந்த அமர்வின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    நோர்வூட் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள ,17 கிராம சேவகர் பிரிவுகளில்  மொத்தமாக 1,04,209 வசிக்கின்றன​ர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

கொரோனாவுக்கு மத்தியிலும் எம்மாலான சேவைகளை தடையின்றி வழங்கி வந்துள்ளோம். கடந்த ஆண்டுகளில் குறைவான ஆளணியோடு நிர்வாகத்தைக் கொண்டு சென்ற எம்மால், புதிய ஆண்டில் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 மேலும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதிக்கும் வட்டார அபிவிருத்திக்காக 40 இலட்சம் ரூபாய் வீதம் நிதி கிடைக்கவுள்ளது.

அனைவரும் ஒற்றுமையாக இந்த நிதியை செலவு செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .