Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 13 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
கண்டி, செட்டிக் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஊடாக ஹட்டன் பிரதேசத்தை மயப்படுத்திய சிவில் சமூக அமைப்புகளுக்கான எட்வகேசி அதாவது பரிந்துரை செய்வது தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஹட்டன் செட்டிக் கரிட்டாஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்ற இந்நிறுவனத்தின் கொள்கை விளக்கத்துக்கு ஏற்ப பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்தே இடம்பெற்றது. மேலும், எட்வகேசி அதாவது பரிந்துரை செய்தல் செயலமர்வினை அம்பகமுவ செயலகத்தின் உத்தியோகத்தர் மோகனராணியினால் முன்னெடுக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது எட்வகேசி அதாவது பரிந்துரைத்தல் என்பது தொடர்பான விளக்கம், எட்வகேசியில் உள்ளடங்கக் கூடிய விடயங்களான கம்பனி சட்டங்கள்,மனிதஉரிமை சட்டம்,பாராளுமன்ற சட்டங்கள்,நுகர்வோர் சட்டம் போன்றவற்றுடன் தற்போது நடைமுறையில் காணப்படக்கூடிய ஏனைய சட்டங்கள்,அத்துடன் இச்சட்டங்கள் மக்களுக்கு எவ்வகையில் நன்மை ஏற்படுத்த கூடியன என்பன ஆராயப்பட்டன.
அத்துடன் இலங்கையில் உள்ள நீதி மன்றங்கள்,நீதி துரையில் உள்ளடங்கும் நீதிபதிகள் மற்றும் இவர்கள் சமூகத்திற்கு எவ்வகையில் தமது சட்டங்களினூடாக மக்களுக்கு உதவுகின்றனர்.தவிரவும் நீதிமன்றங்களில் எவ்வகையான வழக்குகள் தொடரப்படுகின்றது என்பது தொடர்பான விளக்கங்களும் இதனோடு கல்வி துறையில் காணப்படும் கல்விச்சட்டங்கள் அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் விளக்கமளிக்கப்பட்டது.
மனிதர்களுக்கு ஏற்பட கூடிய உடல் ரீதியான பாதிப்புகள் , உள ரீதியான பாதிப்புகள் என்பன இங்கு கலந்துரையாடப்பட்டது.இத்துடன் பிரச்சினைகள் அந்த பிரச்சினைகளை அணுகும் முறைகள் என்பனவும் ஆராயப்பட்டது.
இதை தொடர்ந்து கலந்துக்கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் தற்போது சமூகத்தில் காணப்படக்கூடிய பிரச்சினைகள் இனங்காணப்பட்டதோடு அதற்கு எவ்வகையில் பரிந்துரைகளை மேற்கொள்ள முடியும் அதாவது தீர்வுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துக்கொண்டவர்களினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago