2025 மே 08, வியாழக்கிழமை

விவசாய பயிற்சிய மய்யம்; தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றம்

Kogilavani   / 2020 நவம்பர் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.குமார்

பொலிஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்காக, பாலங்கொடை ரஜவக்க பிரதேசத்தில் உள்ள சப்ரகமுவ மாகாண விவசாய பயிற்சி மய்யம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் தனிமைப்படுத்துவதற்காக மேற்படி மய்யம், தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை, மீண்டும் தனிமைப்படுத்துவதற்கு மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X