Janu / 2023 செப்டெம்பர் 10 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை சமூர்த்தி வங்கியின் கீழ் 475j கிராம சேவகர் பிரிவில் டொரிங்டன் தோட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவருக்கு திரியபிரிச வீடு அமைப்பு திட்டத்தின் மூலம் நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு சனிக்கிழமை (09) உத்தியோக பூர்வமாக பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் லிந்துல சமூர்த்தி காரியாலயத்தில் முகாமையாளர் திருமதி தாரனி மகேந்திரன் உதவி முகாமையாளர் ஜெ ரவி ஜெயகாந்தன் கிராமசேவகர் ஆர் குழந்தைவேல் 475 கிராம சேவகர் பிரிவிற்கான சமூர்த்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூர்த்தி முகாமையாளர் புதிய வீட்டினை திறந்து வைத்து பயனாளியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.. அதேவேளை சமூர்த்தி வங்கியின் ஊடாக டயகம அக்கரப்பத்தனை பிரதேசத்தில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நு கிளன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
துவாரக்ஷான்




10 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
54 minute ago
1 hours ago