2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

வீடுகள் காடுகளாக மாறும் அவலம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்
 
கொட்டகலை ஸ்டோனிகிளிப் பகுதியில், நல்லாட்சி அரசாங்கத்தில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக கட்டப்பட்ட தனிவீடுகள் வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்காமையால், வீடுகள் காடுகளாக மாறுவதாக பயனாளிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஏழு பேச்சஸ் காணியில் தலா 1 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 தனி வீடுகள் இதுவரை எவருக்கும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

ஒருவருட காலமாக பராமரிப்பின்றி பாழடைந்து போய் உள்ள குறித்த 25 தனிவீடுகளும்
தொடர்ந்து பயனாளிகளுக்கு கையளிக்க தாமதமாகினால், மீண்டும் பணம் விரயம் செய்து புனரமைப்பு செய்ய வேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக
கொட்டில்களிலும் பழைமைவாய்ந்த மிகவும் ஆபத்தான தொடர்குடியிருப்புக்களிலும் வாழும் நிலையில், பொது மக்களின் வரிப்பணத்தில் இன்று இவ்வாறு சகல வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய வீடுகள் எவருக்கும் பயன்படாதிருப்பது மிகவும் வேதனைக்குரியது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X