Janu / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலப்பனை, மா ஊவாவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு, வீட்டார் வெளியில் சென்றிருந்தவேளை ஒன்றரை பவுன் நகைகளும், 80 000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டார் வெளியில் சென்றுவிட்டு, திங்கட்கிழமை (01) காலை வந்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 80 000 ரூபாய் பணமும், ஒன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த வீட்டார் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் இதன் மூலம் சேர்த்து வைத்த பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது எனவும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா சொக்கோ (SOCO) பிரிவு பொலிஸாரோடு வலப்பனை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவந்துள்ளது .
செ.திவாகரன் டி.சந்ரு


6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago