2025 ஜூலை 23, புதன்கிழமை

வீதி அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உட்பட்ட மறே தோட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகள், கடந்த ஐந்து தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

கல்வி இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், முள்ளுகாமம் சந்தி முதல் மறே தோட்டம் வரையான உள்ளக வீதி, காபர்ட் வீதியாக புனரமைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பௌத்த துறவி ஒருவர் இவ்வீதியை அபிவிருத்தி செய்ய வேண்டாமெனக் கூறியதால், ஒப்பந்தக்காரர்கள் வீதி அபிவிருத்திப் பணிகைளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இந்நிலையில், வீதி புனரமைப்புப் பணிகள் எதுவும், கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்படவில்லை என்று, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேற்படி வீதி,  காபர்ட் வீதியாக புனரமைக்கப்படும் பட்சத்தில், மறே தோட்ட மேற் பிரிவில் உள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் நன்மையடைவர்.185 வருடங்கள் பலமைவாய்ந்த இந்த வீதி, குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இவ்வீதியின் அபிவிருத்திப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .