2025 மே 19, திங்கட்கிழமை

வீதியில் சென்றவரை மோதி விட்டு தப்பிச் சென்ற வாகனம்

R.Maheshwary   / 2022 ஜூலை 27 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெரணியகல- தெஹியோவிட்ட வீதியின் மகுலுவாதென்ன பிரதேசத்தில் வாகனம் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெரணியகல- இலுக்குவத்தையைச் சேர்ந்த 32 வயதுடைய முத்து யோகநாதன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் (25) இரவு வீதியில் நடந்துசென்று கொண்டிருந்த போது வாகனம் ஒன்று மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வீதியில் நடந்து சென்ற மற்றொரு நபர், பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X