2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 ஜூலை 14 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா நானுஓயா ரதெல்ல கீழ் பிரிவு தோட்ட மக்கள் வீதியில் இறங்கி திங்கட்கிழமை (14) அன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நானுஓயா ரதெல்ல  கீழ் பிரிவு தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்த தோட்டத்தில் இருந்து தலவாக்கலை செல்லும்‌ இரண்டு கிலோமீட்டர் தூரங்கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி கோரிக்கைகளை முன் வைத்தனர். 

கடந்த அரசாங்கத்தில் 2020 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கான . அடிக்கல் நட்டப்பட்டது. 

வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் கைவிடப்பட்டுள்ளது. 

தற்போது இப்பாதையின் ஊடாக செல்ல முடியாத நிலையில் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் தொழிலுக்கு செல்பவர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 

இப்பாதையை உடனடியாக புனரமைப்பதற்கு  சம்பந்தப்பட்ட தரப்பினர்  நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர் .

எஸ் சதீஸ் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .