2025 ஜூலை 23, புதன்கிழமை

‘வீதியைத் திறந்தால் தலதாவுக்கு ஆபத்து’

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கண்டி, ஸ்ரீ தலதாமாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருக்கும் வீதியை, ஏதோவொரு வகையில் மீண்டும் திறந்தால், அதனூடாகத் தீங்குகள் ஏற்படும். அதுமட்டுமன்றி, தலமாமாளிகையின் அத்திபாரத்துக்கும் பாரியளவிலான அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, ஜனாதிபதி சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

மேலே குறிப்பிட்ட வகையில், அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் ஏற்பட்டுள்ளமையால், அந்த வீதியைத் திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.  

தலதா மாளிகைக்கு முன்பாக, மூடப்பட்டிருக்கும் வீதியை மீண்டும் திறக்குமாறு கோரி, கண்டியை வதிவிடமாகக் கொண்டவர்களில் ஏழுவர், தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.  

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனகே அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோர் முன்னிலையிலேயே அழைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .