Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில், நேற்று மாலை(10) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில், எரிகாயங்களுக்கு உள்ளான பெண்ணொருவர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வளர்மதி (வயது 36) என்பவரே, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது வீட்டுக்கு முன்பாகவிருந்த குப்பைத் தொட்டியிலுள்ளக் குப்பைகளை, எரியூட்ட முற்பட்டபோது, அதிலிருந்த மர்மபொருல் வெடித்ததில் எரிகாயங்களுக்கு உள்ளாகினார் என, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .