Editorial / 2019 மே 13 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டம், 10ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து, வெட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை, பொகவந்தலாவ பொலிஸார், இன்று (13) காலை மீட்டுள்ளனர்.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த குழந்தை மாயாண்டி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ ஆல்டி தோட்டத்திலுள்ள தனது சகோதரனின் மகனைப் பார்ப்பதற்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற நபர், மாலையாகியும் வீடு திரும்பவில்லை என்றும் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டார் என்றும் உறவினர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரின் தலையில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago