2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வெட்டுக்காயங்களுடன் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2020 நவம்பர் 04 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன 

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெய்யன்வெல பிரதேசத்தில், நேற்று (3) இரவு இரு சாரருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக்காயங்களுடன் ஐவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலை வளாகத்திலும் மேற்படி இரு குழுக்களும் முறுகலில் ஈடுபட்டதால், வைத்தியசாலைப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாரால் கண்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த கண்டி பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது. 

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் தந்தை, மகன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X