Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். இவ்வாறு வெளிப்படையாகத் தெரிந்திருந்த போதிலும், தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் வெற்றி பெற முடியாத அணியினருடன் இணைந்திருப்பதனால் எந்த விதப் பயனும் இல்லை என, கண்டி மாவட்டத்தின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
ஹரிஸ்பத்துவ தொகுதியில், பல பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வுகளின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், கண்டி நகரம் நவீன நகராக அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது. இவை மாத்திரம் அல்லாமல், இம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி இம்மாவட்டத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் துரிதமாக அபிவிருத்தி செய்துள்ளார். அவரது வேலைத்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தமது ஆதரவுகளை பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்க வேண்டும் என்றார்.
இலங்கையில் வட கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்கி, அவர்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதே எனது இலக்காகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026