2025 மே 03, சனிக்கிழமை

வெல்லவாய நகரத்துக்கு மூன்று நாள் பூட்டு

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

மொனரகலை மாவட்ட வெல்லவாய நகரம், இன்று (16) முதல், நாளை மறுதினம் (18) வரையான மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வெல்லவாய பிரதேசத்தில், 15 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, வெல்லவாய நகர வர்த்த சங்கத்தினரால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை தாமாகவே முன்வந்து மூடுவதற்கு, சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, படல்கும்பர பிரதேசத்தில், 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அப்பகுதியிலுள்ள அலுபொத்த கிராம சேவகர் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக, நேற்று (15) அறிவிக்கப்பட்டது.

இப்பகுதியில், நேற்று (15) மாத்திரம், 159 பேருக்கு, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X