2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் முழ்கிய மஸ்கெலியா நகரம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (09) அன்று மதியம் பெய்த கனமழையால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந் தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் 

கன மழை காரணமாக சாமி மலை ஓயா,காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்தகங்குல ஓயா வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

காட்மோர் நீர்வீழ்ச்சி,மறே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில் இப் பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர் மின் நிலைய பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும்

ஹட்டன் மஸ்கெலியா வீதி அதிகளவில் பணி மூட்டமான நிலையில் காணப் படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செ.தி.பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X