2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வேட்பாளர்கள் தெரிவுக்கான கூட்டம்

Kogilavani   / 2017 நவம்பர் 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

அம்கமுவ மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேச செயலகங்களுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் கூட்டமொன்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், மஸ்கெலியா நகரிலுள்ள லிது விருந்தினர் விடுதியில், எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10 மணிக்கு, நடைபெறவுள்ளது.

இதன்போது, அம்பகமுவ மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டு, வேட்பாளர்களை தெரிவு செய்யவுள்ளார்.

இதன்போது அவர், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத்தலைவர்கள், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் நகர வர்த்தகர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .