2025 மே 14, புதன்கிழமை

வேதனமானது வேதனையானது

Freelancer   / 2023 மார்ச் 08 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு ஏற்றார் போல பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின்  ஒரு நாள் வேதனம் 3,250 ரூபாயாக அதிகரிக்கப்படல் வேண்டும்,  சம்பள நிர்ணய சபையும் தொழில் அமைச்சும்  உடனடியாக  ஒன்று கூடி பெருந்தோட்ட மலையக மக்களின் வேதனம் தொடர்பில் தீர்மானம் மிக்க முடிவு எட்டப்படுதல் அவசியம் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

காலையில் எழுந்தவுடன் மலையேறி மாலை சாய்ந்தவுடன் மனைதேடி, இந்நாட்டின் பொருளாதாரத்தை தனது முதுகில் சுமந்து நாட்டினையும் வீட்டினையும் கட்டியெழுப்பும் எனது பெருந்தோட்ட தாய்மைக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்று எமது மலையகத்தில்  எனது தொப்புள்கொடி உறவுகளான  தாய்மார்களுக்கு எனது சிரம் தாழ்த்திய கௌரவிப்பு உரித்தாகட்டும் என்றார்.

எமது மலையகத்தினை பொறுத்தவரையில் கல்வியறிவிலும் சரி, தொழில்துறையிலும்சரி ஆண்களுக்கு நிகராக பெண்களும் செயலாற்றி வருகின்றனர். அது எமது சமூகத்தின் வளர்ச்சியில் பாரியதொரு சாதனையாகவே நான் பார்க்கின்றேன். அதிபர்களாக, ஆசிரியர்களாக வைத்தியர்களாக, சட்டத்தரணிகளாக மற்றுமன்றி ஊடக துறையிலும் சாதனைகளை எமது மலையக பெண்கள் படைத்துக்கொண்டிருகிகன்றார்கள்.

அவர்கள் அனைவரும் இந்நாட்டின் தூண்களாக இருந்து எமது மலையக சமூகம் உட்பட இந்நாட்டின் அபிவிருத்திக்கு துணைநின்று சர்வதேச ரீதியில் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக மிளிர வேண்டுமென சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினம்  வாழ்த்துகின்றேன் என்றார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .