Ilango Bharathy / 2021 ஜூலை 29 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் கீழ் பிரிவு தோட்ட மக்கள்,
உடப்புஸ்ஸலாவை- இராகலை பிரதான வீதியை மறித்து, இன்று(29) காலை, முன்னெடுத்த
ஆர்ப்பாட்டம் காரணமாக, 3 மணிநேரம் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டதுடன்,
பதற்றமான நிலையும் ஏற்பட்டது.

டெல்மார் கீழ் பிரிவு தோட்டத்தில் நேற்று (28) இரவு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த
இருவர், தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அங்கு கடமையிலிருந்த
வைத்தியர் அலட்சியமாக நடந்துகொண்டதை அடிப்படையாக வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

இவ்விபத்தில் பாதசாரியான டெல்மார் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனும் விபத்தை
ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இராகலை பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குறித்த வைத்திய அதிகாரியின் செயற்பாட்டை கண்டித்துள்ள மக்கள், வைத்தியரை இடமாற்றம் செய்யுமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த உடபுஸ்ஸலாவ பொலிஸாரும் நுவரெலியா
தடயவியல் பொலிஸாரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, போக்குவரத்தை சீர்செய்தனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago