Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவு, மொக்கா தோட்டத்தில் கடந்த ஒருவருடமாக வைத்தியரொருவர் நியமிக்கப்படாமையால், தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு பிரிவுகளைக் கொண்ட மேற்படித் தோட்டத்தில், 3,000க்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். எனினும், இந்த தோட்டங்களுக்கென நிரந்தர வைத்தியர் ஒருவர், கடந்த ஒருவருடமாக நியமிக்கப்படவில்லை என்று, பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குடும்ப நலன்புரி உத்தியோகத்தரும் சாதாரண பெண் ஒருவருமே கடமையில் உள்ளதாகவும் அவசர நிலைமைகளின்போது, பல மைல் தொலைவிலுள்ள மாவட்ட வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால், உயிராபத்துகள் அதிகம் இடம்பெறுவதாகவும் தோட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இந்தத் தோட்டத்துக்கென வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago