2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஸ்டாபொட் தோட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுபாட்டுக்குள்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஸ்டாபோட் தோட்டத்தில் (25) காலை ஏற்பட்ட அமைதியின்மை பொலிஸாரின் தலையீட்டால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்டாபோட் தோட்டத்தில் பல வருடங்களாக மூடிக்கிடந்த இரண்டு குடியிருப்புகளை, இத் தோட்டத்தில் நிரந்தர குடியிருப்புகள் அற்று வாழும் நான்கு தொழிலாளர் குடும்பங்கள் பலாத்காரமாக கைப்பற்றி உட்புகுந்தமையினால் இதற்கு சிலர் எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட  வாக்குவாதத்தில் அத்தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் கவனத்திற் கொள்ளவில்லை என இந்த நான்கு குடும்பத்தினரும் தெரிவிக்கின்றனர்.

 இந்த நிலையில் இராகலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் கைப்பற்றியுள்ள வீடுகளை வீடற்றவர்களுக்கு வழங்க தோட்ட நிர்வாகத்துடன் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .