Editorial / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
நுவரெலியா மாவட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கள் முதல் கறுப்பு சட்டை அணிந்து அல்லது கறுப்பு பட்டி அணிந்து கடமைக்கு செல்ல உள்ளதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (05) நடைபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த அவர், ஜோசப் ஸ்டாலின் ஆசியர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருபவர் என்றார்.
தொழிற்சங்க, உரிமைசார் போராட்டங்களை நசுக்கும் வகையில் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அதுவரை மாணவர்களின் நலன் கருதியே கறுப்பு சட்டை அணிந்து நுவரெலியா மாவட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல உள்ளோம் என்றார்.
ஒரு வாரத்திற்குள் உரிய தீர்வு கிடைக்காவிடின் மேலதிக நடவடிக்கையை எதிர்வரும் வாரத்தில் முன்னெடுப்போம் என்றார்.
அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது.
இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சங்கர் மணிவண்ணன், முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர். வே.தினகரன் , தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா செயலாளர் இந்திரச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
12 minute ago
23 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
3 hours ago
3 hours ago