R.Maheshwary / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள்களுடன் யாத்திரைக்குச் செல்வோரைக் கைதுசெய்வதற்காக, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போதே குறித்த 12 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் மோப்ப நாயான ஸ்டுவட்டின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 10 மில்லிகிராம் ஹெரோய்ன், கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் அனைவரும் 20- 30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேகநபர்கள் அனுராதபுரம், ராகம, கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஹட்டன் நீதவான நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .