Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
சுதந்திர கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “ஸ்மார்ட் வகுப்பு” (Smart Class Room) திட்டம், சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 103 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பு, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக, சப்ரகமுவ மாகாண சபை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக அரசாங்கத்தின் மூலம் 800 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நிதி, உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தலைமையில், சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தில், நேற்று (11) முன்தினம் நடைபெற்றது.
இதன்போது ஸ்மார்ட் வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான நிதியுதவிகள் மற்றும் கணினிகள் என்பவற்றை, மாகாண ஆளுநகர், பாடசாலைகளின் அதிபர்களுக்கு கையளித்தார்.
அத்துடன், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
20 minute ago
33 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
33 minute ago
44 minute ago
1 hours ago