Janu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை முற்றத்தில் இருந்து கீழே குதித்து காணாமல் போன இளைஞன் புதன்கிழமை (24) மதியம் கண்டு பிடிக்கப்பட்டதாக நல்லதண்ணிய பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் இருந்து இரண்டு பெண்களுடன் சிவனொளிபாதமலை சென்ற தினேஷ ஹேமந்த (33) என்ற இளைஞன் ஸ்ரீ பாத உட மலுவ பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ள காணொளி, நிறுவப்பட்ட பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது
இந்நிலையில் நல்லதண்ணிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரே தோட்டத்தை சேர்ந்த இளைஞர் சிலர் விறகு வெட்டுவதற்காக சென்றுள்ள போது , காணாமல் போன இளைஞன் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு இது தொடர்பில் நல்லதண்ணிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் .
அதற்கமைய உடனடியாக அவ் இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞனை மீட்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் , பின்னர் இளைஞன் டிக் ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
குறித்த இளைஞன் மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது , " ஸ்ரீ பாத உடமலுவ வீதியில் வைத்து எனக்கு என்ன நடந்தது என ஞாபகம் இல்லை , சுயநினைவுக்கு திரும்பிய போது, ஒரு கால்வாய் அருகே இருந்தேன் , பின்னர் மெதுவாக ஐந்து நாட்களாக கால்வாயில் கீழே இறங்கினென் , சிவனொளிபாதமலை காப்புக்காட்டில் உள்ள பாறைக் குகைகளில் இரவைக் கழித்தேன் அந்த நாட்களில் தண்ணீர் மட்டும் குடித்து பசியைத் தீர்த்துக்கொண்டேன் " என தெரிவித்துள்ளார் .
மேலும் , குறித்த இளைஞனின் காலில் சில சிறிய காயங்கள் இருப்பதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஷ





7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025