Janu / 2026 ஜனவரி 06 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை கிவுல் ஆர பகுதியில் ஹக்கப்பட்டஸ் பொறியொன்று வெடித்ததில் விவசாயி ஒருவர் காயமடைந்த சம்பவம் திங்கட்கிழமை(05) அன்று இடம்பெற்றுள்ளது.
தனமல்வில, சூரிய ஆர, பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஹதரசிங்க சந்திரதாச என்பவரே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொறுத்தப்பட்ட ஹக்கப்பட்டஸ் பொறியொன்றில் சிக்கி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் தனமல்வில பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
39 minute ago
1 hours ago