Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹட்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹட்டன் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொதுசுகாதார அதிகாரிகள், இன்று (29) திடீர் சோதனை நடத்தியதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
இதன்போதே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, ஊரடங்குசட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் என கடந்த 24 ஆம் திகதி வர்த்தகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலானவர்கள் அவற்றை மீறும் வகையில் செயற்படுவதை காணமுடிவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026