2025 ஜூலை 16, புதன்கிழமை

ஹட்டனில் 8 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டன

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

ஹட்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் நேற்றிரவு (31)  14 நாள்களுக்கு சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ சுகாதார வைத்திய பிரிவின், பொது சுகாதார பரிசோதகர்களாலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த  29ஆம் திகதி அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஹட்டனிலுள்ள வர்த்தகரொருவரும், அவரது சாரதியும் நீர்க்கொழும்புக்குச் சென்று வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக நீர்க்கொழும்பு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாலேயே, பாதுகாப்பு கருதி அங்குசென்றவர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- ஹிஜ்ராபுர பகுதியைச் சேர்ந்த வர்த்தகரினதும்  (ஆறு உறுப்பினர்கள்) அவரது சாரதியினதும் (இருவர்)  குடும்பங்களே இவ்வாறு தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

 

.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X