Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
அண்மைக்காலமாக ஹட்டன் பஸ்தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில், ஊது பத்தி விற்பனையில்
ஈடுபட்டுள்ள சிறுமிகள் யார்? என்பது தொடர்பாகவும் இவர்களை இவ்வாறு செய்ய தூண்டும்
நபர்கள் தொடர்பாகவும் ஆராய, விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த அவர், ஹிஷாலினி பிரச்சினை மலையகம் , முழு இலங்கையையும் ஆட்டிப்படைத்து கொண்டு வருகின்றது.இந்நிலையில் தற்போது ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில், ஊதுபத்தி விற்கும் சிறுமிகள் தொடர்பில் அறியக்கிடைத்தோடு இவர்கள் விற்கும் ஊதுபத்திகள் அனைத்தும் ஒரே நிறுவனத்தின் பத்திகள் எனவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
எனவே, இவர்கள் பின்புலத்தில் நின்று இவ்வாறு வீதிக்கு அனுப்பி விற்பனை செய்ய தூண்டுபவர்கள் தொடர்பிலும், குறித்த சிறுமிகள் தொடர்பிலும் முழு விபரங்களையும் ஆராய
மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில்,
விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago