2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் குப்பை அகற்றும் பிரச்சினை தொடர்கிறது

Gavitha   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த, சரியான இடம் ஒன்று இல்லாத பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில், இந்த நகரசபையால் எந்தவொரு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அது பயனற்றதாகிவிடும் என, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் துணைத் தலைவர் ஏ.ஜே.எம். ஃபாமிஸ் தெரிவித்தார்.

நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலம் தொட்டு, இப்பகுதியில் சேரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு சரியான இடமொன்றைத் தேர்வு செய்வதற்கான முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டிருந்த போதும், அது சாத்தியமாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இது குறித்து, மத்திய மாகாண ஆளுநரிடம் தெரிவித்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக விளக்கி, ஒரு நிலத்தைப் பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வரி செலுத்துவோருக்கு சேவை புரிவதற்காகவே, தாங்கள் நகரசபையில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X