2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் சிறுத்தை மீட்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்கும் லிந்துலை அக்கரப்பத்தனை ஹென்போல்ட் தோட்ட ஆக்ரா (வாழைமலை)  பிரிவில் கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கி இருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை ஒன்றை சனிக்கிழமை  (20) அன்று நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால்  பத்திரமாக மீட்கப்பட்டது. 

நான்கு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட நன்கு வளர்ந்த ஆண் சிறுத்தை இது என்றும்  ரந்தெனிகல வனவிலங்கு திணைக்களத்தின்  பிரதான அதிகாரியும் கால்நடை வைத்தியரும் அகலங்க பினிடியா தெரிவித்தார். 

ஒரு பெரிய குழியில் விழுந்த பிறகு மீட்கப்பட்ட இந்த சிறுத்தையின்  உறுப்புகள் சேதமடைந்துள்ளதா என்பதைப் பரிசோதிக்க பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் சிறுத்தைக்கு தேவையான சிகிச்சையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹக்கல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளினால் பெரும் முயற்சியுடன் மீட்கப்பட்ட இந்த சிறுத்தையை பின்னர்,  சிகிச்சைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

பி.கேதீஸ்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .